உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யாருடையது அந்த ஆடி கார்? மாணவி பாலியல் வன்முறை வழக்கில் மர்மம்

யாருடையது அந்த ஆடி கார்? மாணவி பாலியல் வன்முறை வழக்கில் மர்மம்

சென்னை: 'சென்னை அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறை செய்த நபரின் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டது' என, போலீசார் தெரிவித்தனர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்த, 23ம் தேதி, இரவு, 8:00 மணியளவில் காதலனுடன், 19 வயது மாணவி பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர், காதலனை மிரட்டி விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளார்.இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, அதே பகுதியில் உள்ள, மண்டபம் தெருவைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜன., 8 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யார் அந்த சார்?

இச்சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், தன்னை பாலியல் வன்முறை செய்த நபர், மூன்று, 'ஆப்ஷன்' கொடுத்ததாக கூறியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:முதல் ஆப்ஷனாக, காதலருடன் நான் பேசிய வீடியோவை, கல்லுாரி நிர்வாகத்திடம் அளித்து, என்னை இந்த கல்லுாரியில் இருந்து நீக்குவதாக மிரட்டினார். இரண்டாவது ஆப்ஷனாக, 'என்னுடன் கொஞ்ச நேரம் இரு' என்றார். மூன்றாவது ஆப்ஷனாக, 'அந்த சார் கூட கொஞ்ச நேரம் இரு' என்றார். இவ்வாறு அந்த மாணவி கூறியிருக்கிறார்.இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த, 'அந்த சார் யார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை, பாலியல் வன்முறை செய்த நபர், அங்கிருந்த, 'ஆடி' கார் பின்புறம் தரையில் அமர வைத்துள்ளார். அப்படியானால், அந்த கார் யாருடையது, அதில் வந்த நபர் யார் என்பதும் மர்மமாக உள்ளது.மாணவியை வன்முறை செய்த நபர், மிரட்டுவதற்கு முன், அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபரிடம், 'நான் அவளை மிரட்டி விட்டு விடுவேன்' என, கூறியுள்ளார். அந்த நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத் தும், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.போலீசார், மாணவியை பாலியல் வன்முறை செய்த நபர் ஒருவர் தான்; அவர் தான் ஞானசேகரன் என கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளனர். ஆனால், மாணவியின் புகாரும், முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ள தகவல்களும், இச்சம்பவத்தில் முக்கிய புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது.

தொழில் அதிபர் கடத்தல்

இது தொடர்பாக, போலீசார் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் முத்துகுமார், 60, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஞானசேகரன், அவரின் சகோதரர் சுரேஷ் உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்,அவர்களில், மூன்று பேர் பெண்கள். ஞானசேரன் உள்ளிட்டோரிடம் இருந்து, துப்பாக்கி, கத்தி, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஞானசேகரன் மீது, திருவான்மியூர், சாஸ்திரி நகர், நந்தம்பாக்கம் காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லை வழக்குகள் உள்ளன. அவர் ஒரு ரவுடி. ஞானசேகரனின் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sundar
டிச 30, 2024 16:59

இப்போது உள்ள முதல் தகவல் அறிக்கை மிகவும் தவறாக உள்ளது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது. யார் அந்த சார்ர்ர்ர்ர்ர்ர்? குடும்பமே குற்றப்பிண்ணனி கொண்டது என்றால் பழைய வழக்குகளில் முழு தண்டனை பெற்று விட்டானா? ஆடி கார் யாரோடது அதன் பதிவு எண்ணை வைத்து கண்டு பிடிக்க முடியாதா? இன்னேரம் காரைக் காணும் என்று ஒரு புகார் வந்திருக்கும். மற்ற மாணவிகளின் புகாரையும்ன்பெற்று ஒருங்கிணைந்த வழக்காக மாற்றி, வேறு ஒரு முதல் தகவல் அறிக்கை அளிக்கலாமே?


dakshna
டிச 30, 2024 16:39

அனைவருக்கும் FIR இல் இருப்பது ஆடி கார் அல்ல .. ஆடி building என்பதே ... குற்றம் சுமத்தப்பட்ட நபர் இந்த பெண்ணை ஆடி building க்கு பின் கொட்டி சென்றான் என்று தான் உள்ளது


SIVA
டிச 31, 2024 09:36

இப்பவெய் ஆடி கார் என்பது ஆடி BUILDING ஆகமாறி விட்டது இன்னும் சில நாட்களில் சம்பவம் நடந்தது மார்கழி மாதம் TECNICAL ERROR காரணமாக ஆடி என்று பதிவு செய்ய பட்டு விட்டது என்று ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களில் செய்தி வரலாம் ....


baala
ஜன 01, 2025 14:26

அது ஆடிட்டோரியம் என்று சொல்லுகிறார் ஒருவர் யு டியூப் சேனல் இல்


dakshna
டிச 30, 2024 16:37

சார் .. ஆடி கார் இல்லை .. முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் சொன்னது ஆடி building பின்னால் கொண்டு சென்றான் என்பதே ...


Sriniv
டிச 30, 2024 14:08

அண்ணா பல்கலை கழக வளாகத்தில் அத்தனை CCTV கேமராக்கள் இருந்தும் அந்த வண்டி நம்பரை கண்டு பிடிக்க முடியலையா ? இதை நாம் நம்பணுமா ? வெட்கக்கேடு.


Natchimuthu Chithiraisamy
டிச 30, 2024 12:07

சட்டம் தண்டனை கொடுத்துவிடும். ஆடி காரை பார்த்து சட்டத்திற்கு பயமே இல்லை


Matt P
டிச 30, 2024 08:47

அந்த சாறு கட்சியில மிக முக்கியமான புள்ளியா இருப்பாரோ


Indhuindian
டிச 30, 2024 08:23

ஒன்னும் நடக்காது சும்மா அப்படியே இழுத்துகிட்டே போயி ஜனங்க மறந்துடுவாங்கா இதை விட ஒரு பெரிய விஷயம் கிடைக்காதா என்ன ? வேங்கை வயல் மாடல்


Kassalioppilan
டிச 29, 2024 22:23

கற்பழிப்பு குற்றத்துக்கு வெளிநாட்டைப் போல் உடனே தண்டனை கொடுத்தால் பயம் வரும்.


JAYAPAL M
டிச 29, 2024 06:48

குற்றவாளிக்கு தக்க தண்டணை குடுக்கணும் இனிமேல் யாரும் இந்த தவறை செய்ய பயமும் வரணும் நேர்மையன நீதி வேண்டும்


visu
டிச 28, 2024 16:41

ஒரு கால் வந்தது" போன் aeroplane மோடில் இருந்தால் கால் எப்படி வரும்


முக்கிய வீடியோ