உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷாவின் ராஜினாமா கேட்கும் திருமா காஷ்மீர் முதல்வரை கேட்காதது ஏன்?: பா.ஜ.,

அமித் ஷாவின் ராஜினாமா கேட்கும் திருமா காஷ்மீர் முதல்வரை கேட்காதது ஏன்?: பா.ஜ.,

திருப்பூர் : ''காஷ்மீர் சம்பவத்துக்கு அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்; ஆனால், காஷ்மீர் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஏன் யாரும் கூறவில்லை?'' என்று பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.திருப்பூரில் நேற்று அவர் கூறியதாவது: காஷ்மீரில் சுற்றுலா பயணியர் 26 பேர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது தொடர்பான வீடியோக்கள் மனதை உருக்குகின்றன. நடந்த சம்பவத்தை பா.ஜ., கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு பின்னால் யார் இருந்தாலும் எல்லாரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nhagaor8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், 'நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்' என திருமாவளவன் கூறி உள்ளார். காஷ்மீரை ஆட்சி செய்கிற முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கூறவில்லை.

காஷ்மீரை விடுங்கள், 'இங்கிருக்கும் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷசாராய பலிகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று திருமாவளவன் கூறியிருந்தாரானால், அவர் இன்று பேசுவதில் நியாயம் இருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம். காஷ்மீரில் ஏன் சுற்றுலா பயணியர் தாக்கப்படுகின்றனர்? வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணியர் வரும் அளவுக்கு, காஷ்மீர் வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு, அமைதி திரும்பி உள்ளது. ஆனால், காஷ்மீர் ஒரு கலவர பூமி என உலகத்திற்கு காட்ட வேண்டும் என பாக்., நினைக்கிறது.அதில் ஈடுபட்ட ஒருவரைக்கூட இனி மத்திய அரசு விட்டு வைக்காது. அது தொடர்பான நல்ல செய்தி நமக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

RAJ
ஏப் 26, 2025 10:23

ஏன் கேட்கவில்லை என்றால் ..


ராமகிருஷ்ணன்
ஏப் 25, 2025 21:57

புல்டோசர் ட்ரீட்மெண்ட் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.


Raja
ஏப் 25, 2025 20:09

தேச தூரேகி இவரை நாடு கடத்தனும்.


S.velushanmugam S.velushanmugam
ஏப் 25, 2025 20:04

இந்தியாவின் துரோகி திரு(மா மா )வை ஒழிக்க வேண்டும்.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 25, 2025 20:02

தினமலர் நிர்வாகத்திற்கு பணிவான வேண்டுகோள்.... தயவு செய்து போட்டோவை அகற்றி விடுங்கள்.... அபசகுணம் கொண்டது...


aaruthirumalai
ஏப் 25, 2025 20:01

இவரை பத்திய செய்திக்கு யாரும் கருத்து கூற கூடாது.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 25, 2025 19:59

அப்படி கேட்டால் பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காது இந்த காலபயிரவர் வாகனத்திற்கு.... அட்டை கத்தி வீரன்..... இந்த குருமா.....


தேவதாஸ் புனே
ஏப் 25, 2025 19:48

திருமா..... ஸ்டாலின் கூப்டாக ......போய் என்னான்னு கேளும்......


தேவதாஸ் புனே
ஏப் 25, 2025 19:46

கள்ளச் சாராயத்தை ஒழிக்கனும்னு ஸ்டாலினைப் பார்த்து பேசாம..... பார்லிமென்டுல போய் பேசிய தொடை நடுங்கி..... முதுகு தண்டு இல்லாத..... நீரெல்லாம்.....


தேவதாஸ் புனே
ஏப் 25, 2025 19:39

யாரப்பா நீ.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை