உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பது ஏன்?

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பது ஏன்?

கோவை : இம்மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இது, பெண்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.கடந்த பிப்., 29ம் தேதி ஒரு கிராம் - 22 கேரட் ஆபரணத் தங்கம், 5,815 ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச், 1 முதல் மளமளவென உயர்ந்து, நேற்றைய தினம், 22 கேரட் தங்கம் ஒரு கிராம், 6,090 ரூபாயாக உயர்ந்திருந்தது; 24 கேரட் தங்கம், 6,644 ரூபாய்க்கு விற்பனையானது. இது, தங்க நகை வாங்கும் எண்ணத்தில் இருந்த பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விலையேற்றத்துக்கான காரணம் குறித்து, மத்திய அரசின் எம்.எம்.டி.சி., நிறுவனத்தின் கோவை டீலர் கயிலைராஜன் கூறியதாவது:சில நாட்களாக, சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் உற்பத்தி குறியீடு குறைந்தது தங்கத்தின் விலையில் பிரதிபலித்தது. உற்பத்தி குறைவு, நிறுவனங்களின் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்; டாலர் மதிப்பு குறையும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து, தங்கம் வாங்கத் துவங்கினர்.ரஷ்யா-, உக்ரைன், இஸ்ரேல், - காஸா யுத்தங்கள் நீடிப்பதால் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு போன்றவற்றால், பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர். மேலும், சீனா உள்ளிட்ட முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. மற்ற நாடுகளின் கரன்சிகளையும் தங்கமாக இந்நாடுகள் மாற்றி வருகின்றன. இதன் காரணமாக, தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என கணிக்க முடியாத அளவுக்கு சந்தை நிலவரம் காணப்படுகிறது. தங்கத்தை ரொக்கமாக மாற்ற விரும்பும் பொதுமக்களுக்கு இது உகந்த நேரம்; தங்கம் வாங்க விரும்புவோர் சில நாட்கள் காத்திருப்பது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ