உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈ.வெ.ரா., நுாலகப் பணியில் கண் திருஷ்டி படம் எதற்கு! பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு விளக்கம்

ஈ.வெ.ரா., நுாலகப் பணியில் கண் திருஷ்டி படம் எதற்கு! பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவையில், ஈ.வெ.ரா., பெயரில் கட்டப்படும் நுாலகத்துக்கு முன், இரண்டு இடங்களில், கண் திருஷ்டி படங்கள் வைத்திருப்பது ஏன் என்பதற்கு, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று விளக்கம் அளித்தார்.கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடியில், 6.98 ஏக்கரில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில், எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. இப்பணியை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். தரத்தை ஆய்வு செய்த அவர், தளத்துக்கு பதிக்கப்பட உள்ள கிரானைட் கற்களை பார்வையிட்டார்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நுாலகம் கட்டுமான பணியை ஜனவரிக்குள் முடித்து, தைப்பொங்கலுக்குள் திறக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஐந்தாவது தளம் கட்டப்படுகிறது; இன்னும் இரண்டு தளங்கள் கட்ட வேண்டும். தரமாக, வேகமாக கட்டுமான பணி நடக்கிறது; டிசம்பர் மாதத்துக்குள் பணி முடியும்,'' என்றார்.அப்போது, 'ஈ.வெ.ரா., பெயரில் கட்டப்படும் நுாலகத்தின் முன், கண் திருஷ்டி படங்கள் வைக்கப்பட்டிருக்கிறதே...' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.அமைச்சர் வேலு பதிலளிக்கையில், ''கண் திருஷ்டி படங்கள் வைத்திருப்பது எனது கவனத்துக்கு வரவில்லை. நான் ஒரு பெரியாரிஸ்ட்; பகுத்தறிவாளன். இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டதில்லை. கட்டுமான பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், என்னை போல் பெரியாரிஸ்ட்டாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவருக்கு ஏதேனும் நம்பிக்கை இருந்து, அதனடிப்படையில் வைத்திருக்கலாம். அரசும், நானும் இதுபோன்ற படங்கள் வைக்க எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை. அவருடைய நம்பிக்கை; அவர் வைத்திருக்கிறார். கட்டட பணி முடிந்த பிறகு, அவை இருக்காது,'' என்றார்.

'அரசியல் வேண்டாம்'

அமைச்சர் வேலு, பேட்டியை துவக்குவதற்கு முன், 'சென்னை செல்வதற்கு விமான நிலையம் போக வேண்டும். அரசியல் கேள்விகள் வேண்டாம்' என, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

கோபாலன்
ஜூலை 20, 2025 23:37

கோவையில் பல தெருக்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. அவற்றை பராமரிப்பு செய்ய யாமல் பல கோடி செலவில் பூங்கா/ நூலகம் அவசியம் தானா


M S RAGHUNATHAN
ஜூலை 20, 2025 17:54

கருணாநிதி சமாதியில் தினமும் தயிர் வடை படையல் வைப்பது பகுத்தறிவா அமைச்சரே ?அந்த சமாதியில் நீங்கள் சிப்லா கட்டையை வைத்து பஜனை செய்தது பகூத் அறிவா அமைச்சரே ?


Subramanian Marappan
ஜூலை 20, 2025 17:05

பெரியார் பெயரில் நூலகம் கட்டுகிறீர்கள். பெரியார் அறக்கட்டளை சார்பில் வீரமணி இதற்கான நிதியை கொடுத்தாரா? இதே போல் கருணாநிதி பெயர் வைக்கப்பட்ட எல்லா கட்டிடங்களுக்கும் திமுக கட்சியின் பணம் செலவிடப்பட்டதா?


RAM MADINA
ஜூலை 20, 2025 16:29

யாரு இவரை தெரியல கருணாநிதி சமாதி ல பஜனை பாடுன பெரியாரிஸ்ட். ஒரு அடுக்குல கட்டுன பாலமே நிக்கல எட்டு மாடி அதுவும் ஜனவரி குள்ள திறக்கற வரை தாங்குமா ?


Kulandai kannan
ஜூலை 20, 2025 14:06

நூலகங்கள் வழக்கொழிந்து வரும் நிலையில், திமுக அரசு பெரும் செலவில் நூலகங்கள் கட்டுவதன் மர்மம் என்ன?


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 15:24

இந்த திமுக பயல்களிடம் எனக்கு பிடித்தது எது தெரியுமா? தங்களுக்கு பாதமாக எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதிலிருந்து மாட்டிக் கொள்ளாமல் அனாயசமாக வார்த்தை ஜாலத்தை வைத்து தப்பித்து விடுவான்கள். இது கருணாநிதி தன் அனுபவத்தின் மூலம் இவன்களுக்கு கற்றுக் கொடுத்த பால பாடமாகும். அதென்ன பாலபாடம் என்று கேட்பவர்கள் கூகுளில் போய் கருணாநிதியின் ஆட்சியில் கூவத்தில் முதலை எப்படி வந்தது என்பதை மட்டும் தேடிப் பாருங்கள்


Sampath
ஜூலை 20, 2025 15:29

ஏதாவது செஞ்சாதானே வருமானம் வரும்


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 16:31

காண்ட்ராக்ட் ஒரு காமதேனு. மேலும் புத்தக வெளியீட்டாளர்களிடம் கமிஷன்.


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 20, 2025 10:29

பெரியாரிஸ்ட் அப்படினா இறந்து போன கருணாநிதி நினைவிடத்தில் யாருக்கு கேட்கும் என்று பஜனை பாடினீர்கள்.அது மூட நம்பிக்கை வரம்புக்குள் வராதா?????


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 10:28

ஈவேரா நூலகத்தில் 21 ம் பக்கம் அகற்றப்பட்ட புத்தகங்கள் வைக்கப்படும். முக்கியமாக 1948 முதல் 1967 வரை ஈவேரா திமுகவைத் திட்டி எழுதிய கட்டுரைகள். 1965 இல் ஹிந்தியை ஆதரித்து எழு‌தியவற்றையும் வைக்க மாட்டார்கள். முக்கியமாக அந்த போலி யுனஸ்கோ விருது பற்றி இருக்காது. ஆக ஆன்மீக தமிழ்நாட்டுக்கு ஈவேராவே ஒரு திருஷ்டிதான்.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 09:28

அதுக்கு பதில் ஈர வெங்காயத்தின் படத்தையே வைத்திருக்கலாம். திருஷ்டி படாது.


அப்பாவி
ஜூலை 20, 2025 09:21

பில்டிங் கட்டி முடிக்கிற வரைக்குமாவது இடியக்கூடாது. அப்புறம் பகுத்தறிவு பேசலாம். மூணு மாசத்தில் இடிஞ்சா மழை மேலே பழி போடலாம்.


அப்பாவி
ஜூலை 20, 2025 09:19

40 பர்சண்ட் ஆட்டையில் கண் திருஷ்டி படக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை