உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செல்வப்பெருந்தகைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க தயக்கம் ஏன்?

செல்வப்பெருந்தகைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க தயக்கம் ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக, அவரது கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரிக்க தயக்கம் ஏன்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

சில தினங்களுக்கு முன் நடந்த, பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்தும் பேசியுள்ளனர். அதன்பின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், ஆம்ஸ்ட்ராங் கொலை சதியில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி சந்தேகம் கிளப்பியபோது, எங்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான பால் கனகராஜிடம் போலீசார் விசாரித்தனர். தற்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை மீது, பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக, செல்வப்பெருந்தகைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். அரசுக்கு ஏதேனும் சங்கடங்கள் இருந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இவ்விவகாரத்தில் செல்வப்பெருந்தகையை பதவி நீக்கக் கோரி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலர் ஜெய்சங்கர், செப்., 17ல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ