உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.சி., கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின் : நயினார் நாகேந்திரன் கேள்வி

வி.சி., கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின் : நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்:: “முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு கொடுப்பாரா,” என விருதுநகரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.பூத் கமிட்டி கலந்தாய்வில் பங்கேற்ற அவர் கூறியதாவது:பா.ஜ., பூத் கமிட்டிகளை வலிமையாக்க, முதற்கட்டமாக விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி லோக்சபா தொகுதிகளிலுள்ள பூத் கமிட்டிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கவும், தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவும் பயணத்தை துவங்கியுள்ளோம்.திருவண்ணாமலை கூட்டத்தில், அ.தி.மு.க., கூட்டணி டிபாசிட் இழக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அடிமை மாடல், பாசிச அரசியலை செய்து வருகிறது. ஆளுங்கட்சியினர், பெரும்பான்மையான மக்கள் மனதை புண்படுத்தும்படியாக நடந்து கொள்கின்றனர். ராஜா எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெண்களை தவறாக பேசியுள்ளனர்.அரசு பள்ளிகளில், 'ப' வடிவில் மாணவர்களை அமர வைப்பதை விட அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மிகவும் முக்கியம்.ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து, லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே தி.மு.க., அரசு குடும்ப தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கியது.அடுத்தாண்டு தேர்தல் வருவதால் விடுபட்ட குடும்ப தலைவியருக்கு, தற்போது 1,000 ரூபாய் வழங்கப்படும் என்கின்றனர். 2026ல் தி.மு.க., ஆட்சிக்கு வராது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

M Ramachandran
ஜூலை 15, 2025 01:12

இது என்ன கேள்வி? மனமுவந்து பெருந்தன்மையுடன் உட்கார பிளாஸ்டிக் சேர் கொடுக்க ஆணையிடுவார்.


Raj S
ஜூலை 15, 2025 00:49

இப்டியே பேசி பேசி தனியா நின்னா பத்து வோட்டுக்கு பிரயோஜனம் இல்லாதவனையெல்லாம் பெரிய ஆளா ஆக்கிடுங்க


ராஜா
ஜூலை 14, 2025 23:50

அந்த கண்டெய்னரில் தண்டவாளத்தில் கடத்தப்பட்ட ஐநூற்று நாற்பது கோ….டிவி சார் உதவியுடன் தான் வடக்கு திசை நோக்கிச் சென்றதால் இப்போது உபயோகிக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு போல.


Shankar
ஜூலை 14, 2025 23:47

விசிகே அவர்கள் எல்லாம் இன்று இருக்கும் பதவிகளில் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் என உனக்கு தெரியுமா அப்படிப்பட்ட நியாயத்திற்கு கூடஅடங்க மறுக்கும் காட்டுமிராண்டி கூட்டங்களுக்கு பதவி கொடுக்க சொல்றியா மத்தியில் ஆளும் பிஜேபி அது மாதிரி கொடுத்திருக்கா


ப.சாமி
ஜூலை 14, 2025 21:08

ஆட்சியில் பங்கு தராவிட்டாலும் பரவாயில்லை.அடிக்கும் பணத்தில் பங்கு தந்தால் போதும்


K.n. Dhasarathan
ஜூலை 14, 2025 21:04

நைனார் முதலில் ஜனாதிபதிக்கு உரிய மரியாதையை கொடுங்கள் அப்புறம் ஆட்சி பங்கு பற்றி பேசலாம், பாவம் முர்மு அவர்களை ஒரு பொம்மையாக நடத்தி, கோயிலுக்கு போனால் வெளியே நிறுத்தி, ஒரு ஒன்றிய அமைச்சர், மேல் சாதி, அவர் மட்டும் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தியது, நாட்டுக்கே அவமானம் இல்லையா ? இவர் ஆட்சியில் பங்கு பற்றி பேசலாமா ?


T.sthivinayagam
ஜூலை 14, 2025 21:01

பாமாகாவுக்கு துணை முதல்வர் பதவி தர நைனார் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


ramesh
ஜூலை 14, 2025 16:21

முதலில் உங்களுக்கு எடப்பாடி ஆட்சியில் பங்கு கொடுக்கிறாரா பாருங்கள் நைனார் அவர்களே


Santhakumar Srinivasalu
ஜூலை 14, 2025 20:13

சரியான கருத்துள்ள கேள்வி சாமி!


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 14, 2025 16:04

முதலில் நல்ல நாற்காலி கொடுக்கட்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 15:54

பட்டியலினத்து தலைவர்களை நடுச்சாதி பணநாயக கட்சிகள் என்றுமே முன்னேற விடமாட்டார்கள். எத்தனையோ உதாரணங்கள். முக்கியமா கருணா விசிகே விடம் கூறிய..நீங்களெல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா வசனம்.