உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதி துணை முதல்வரானால் தக்காளி விலை குறையுமா: உதயகுமார்

உதயநிதி துணை முதல்வரானால் தக்காளி விலை குறையுமா: உதயகுமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை வாடிப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை மேடையில் உட்கார வைக்கிறார். தி.மு.க.,வுக்காக காலமெல்லாம் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களையெல்லாம் எதிரில் கீழே உட்கார வைப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.உங்களுக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக உதயநிதியை துணை முதல்வராக்கி அழகு பார்க்க நினைப்பதெல்லாம், ஸ்டாலினுக்கே கொஞ்சம் கூடுதலாகத் தெரியவில்லையா?அப்படித்தான் செய்வேன் என்று கூறினால், அதற்கு சர்வாதிகாரம் என்று தான் பெயர். மூச்சுக்கு முன்னுாறு முறை அண்ணாதுரையின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லும் ஸ்டாலின், அவரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்.கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஓட்டு கேட்டு செல்லும் போதும், தேர்தல் அறிக்கையிலும் உதயநிதியை அமைச்சர் ஆக்குவோம் என்று எங்கும் சொல்லவில்லை. இப்படித்தான், சொல்லாததை செய்வது; சொன்னதை செய்வதில்லை என்ற குறிக்கோளோடு செயல்படும் முதல்வர் ஸ்டாலின், ஓட்டு கேட்கும் போது மட்டும், அதற்கு மாறாகச் சொல்லி தன்னையே புகழ்ந்து கொள்வார். மக்கள் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஸ்டாலினுக்கு, வரும் காலங்களில் நல்ல அடி கிடைக்கும்.உதயநிதி துணை முதல்வராகி விட்டால், தமிழகத்தில் குறைந்தபட்சம் தக்காளி விலையாவது குறையுமா?இவ்வாறு அவர் பேசினார் -நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

a.mohankumar
செப் 23, 2024 22:33

தக்காளி விலை குறையும்போது முதல்வர் ஆனா உங்களுக்கு okva


a.mohankumar
செப் 23, 2024 22:30

தக்காளி விலை குறையும்போது அவர் துணை முதல்வர் ஆனா உங்களுக்கு okva


ram
செப் 23, 2024 16:53

ஒரு ககேள்வி கேட்டால் அது ஒரு நல்ல கேள்வியாக ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கனும்.. இதெல்லாம் ஒரு முன்னால் அமைச்சர் கேட்கின்ற கேள்வியா.. எதுவும் பேசத்தெரியலையினா வாயை மூடிக்கிட்டு இருந்திடலாமே..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 23, 2024 14:19

தக்காளி விலை குறைந்தால் விவசாயிகள் வருமானம் பாதிக்கப்படும். பின்னர் அவர்கள் விலை கட்டுப்படியாகவில்லை பிடுங்கிய கூலி கூட கிடைக்கவில்லை என்று சாலையோரம் வீசி செல்வார்கள். நேற்று கூட பூ விலை கட்டுப்படியாகவில்லை என்று சாலையோரம் வீசிச் சென்றதாக செய்திகள் வந்தது. இது போல் விவசாயிகள் செய்வது நியாயமா? சாலையோரம் வீசிச் செல்லாமல் ஏழைகளுக்கு அனாதை ஆசிரமங்கள் கோவில் அன்னதான கூடங்கள் போன்றவைகளுக்கு கொடுக்கலாமே. விவசாயிகள் உழைப்பில் வந்த பொருட்களை வீசிச் செல்வது குழந்தை பெற்று அக்குழந்தையை சாலையோரம் வீசிச் செல்வதை போல் உள்ளது. மழை இல்லை வறட்சி வெள்ளம் போன்ற காலங்களில் உடனே மானியம் வேண்டும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடுவது நியாயமா? உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவு எனும் போதும் அப்பொருள்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்கலாமே விவசாயிகளுக்குள் ஒற்றுமை இருந்தால்.


M Ramachandran
செப் 23, 2024 12:53

அவர் தக்காளியை பற்றி உங்களுக்கென்ன கவலை


Rajan
செப் 23, 2024 04:36

வயிற்றெரிச்சல்.


Hari
செப் 23, 2024 07:17

Don't worry rajan... Tasmac rate will remain same... Enjoy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை