உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: 'ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் கொடுப் பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழா வில் அவர் பேசியதாவது: மனிதனுக்கு நல்ல அடிப் படையைத் தருபவர்கள்; சமூக, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்பவர்கள் ஆசிரியர்கள். வாழ்வில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் கல்வி கொடுத்த ஆசிரியர்களை மறக்கக் கூடாது. ஆசிரியர் பணி போற்றுதலுக்குரியது. புதுச்சேரியில் ஆசிரியர்களின் பணி எவ்வளவு சிறப்பாக உள்ளது, மாணவர்கள் கல்வியில் எவ்வாறு உயர்ந்து வருகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புதுச்சேரி மாணவர்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி. இப்பெருமை ஆசிரியர்களையே சாரும். மாணவர்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுத்துள் ளது. அது எங்கள் கடமை. புதுச்சேரியில் கல்வியின் நிலை சிறப்பாக இருக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் வந்து கொண்டுள்ளோம். பள்ளியில் இடைநிற்றல் இல்லாமல் செய்யவும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நல்ல கல்வி பெறவும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியிலிருந்து அதிகம் பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வரவேண்டும். இதற்கான ஆர்வம் உள்ள மாணவர்களிடம் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தினால், அவர்கள் வெற்றி பெற உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஏ.சி.பி.,யை விரைவில் கொடுப்பதற்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா: கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா இ.சி.ஆர்., ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. கல்வித் துறை செயலர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு, கவர்னர் இக்பால் சிங் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டு டில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் கவுரவிக் கப்பட்டனர். தலைமைச் செயலர் சத்தியவதி வாழ்த்திப் பேசினார். கல்வித் துறை இயக்குனர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், துணை இயக்குனர்கள் மீனாட்சி, ரகுபாலன், முதன்மைக் கல்வி இயக்குனர் அனுமந்தன் உட்பட பள்ளித் துணை ஆய்வாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் துணை ஆய்வாளர் அமிர்த கணேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ