உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவாலியே விருது: வேங்கடேசனுக்கு பாராட்டு

செவாலியே விருது: வேங்கடேசனுக்கு பாராட்டு

புதுச்சேரி : பிரெஞ்சு அரசின் செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலைமாமணி வேங்கடேசனுக்கு பாராட்டு விழா நடந்தது. பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த கலைமாமணி வேங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையொட்டி அஜீஸ் நகரில் உள்ள செல்வமுருகா திருமண நிலையத்தில் பாராட்டு விழா நடந்தது. பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். கலை விமர்சகர் சென்னை இந்திரன் முன்னிலை வகித்தார். நீதியரசர் தாவீது அன்னுசாமி தலைமை தாங்கி விருது பெறும் வேங்கடேசனுக்கு நினைவு பரிசை வழங்கினார். எழுத்தாளர் பிரபஞ்சன், சித்தன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பிரான்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் தசரதன், கவிஞர் கண கபிலனார், சுகுமாறன் முருகையன், பேராசிரியர் தளிஞ்சன் முருகையன், செவாலியே மதன கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை