மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தொடர் மருத்துவக் கல்விக் கருத்தரங்கு நடந்தது. 'மாரடைப்பினால் அவதிப்படும் நோயாளிகளின் பராமரிப்பில் செவிலியர்களின் பங்கு' என்ற தலைப்பில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் முகமது அனீபா பேசினார். இதய ரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு குறித்தும், அதற்கான காரணங்கள், நோயைக் கண்டறியும் வழி, சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் முகமது அனீபா விளக்கினார். முன்னதாக கருத்தரங்கில் பயிற்சி இயக்குனர் டாக்டர் ரங்கநாத் தலைமை தாங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் வாசுகி வரவேற்றார். பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து செவிலியர்கள், மருத்துவக் கல்லூரிகளின் செவிலிய மாணவிகள் கலந்து கொண்டனர். செவிலியர் கண்காணிப்பாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
3 hour(s) ago | 1
4 hour(s) ago | 1