உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சம்பளத்தை உயர்த்த வேண்டும் ரொட்டி பால் ஊழியர்கள் கோரிக்கை

சம்பளத்தை உயர்த்த வேண்டும் ரொட்டி பால் ஊழியர்கள் கோரிக்கை

புதுச்சேரி : சட்டசபையில் அறிவித்தப்படி சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என ரொட்டி பால் ஊழியர்கள் முதல்வர், கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பளம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.இதனை தொடர்ந்து ரொட்டி பால் சங்க ஊழியர்கள், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை