| ADDED : ஜூலை 17, 2024 12:26 AM
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் முத்துமாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாரியம்மன் கோவில் நிர்வாகத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், பலராமன், பிரகாஷ், நாகலிங்கம், வசந்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.மாணவர்கள் சுற்று வட்டார பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் செல்வபாண்டியன், கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் எழில்வேந்தன், அரசு பள்ளி நுாலகர் கலியமூர்த்தி, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.