உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு : பாகூரில் பொது மக்கள் போராட்டம் 

சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு : பாகூரில் பொது மக்கள் போராட்டம் 

பாகூர்:பாகூரில் சாராயக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகூர் ஏரிக்கரை அருகே சாராயக்கடை இயங்கி வந்தது. இந்த சாராயக்கடையை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுருத்தி வருகின்றனர். இந்நிலையில், சாராயக்கடை விற்பனை உரிமம் முடிவடைந்த நிலையில், கலால் துறையின் மூலமாக மீண்டும் விற்பனை உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, ஏலம் எடுத்த நபர் நேற்று காலை பாகூரில் சாராயக்கடை கட்டுமான பணியை துவங்கிட பூஜை செய்துள்ளார். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று சாராயக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். '' இந்த இடம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமானது. இந்த இடத்தில் சாராயக் கடை செயல்பட கூடாது என நாங்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இப்போது மீண்டும் இங்கு சாராயக்கடை திறக்க கூடாது. அதற்கு பதிலாக அந்த இடத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.'' நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ram
ஜூலை 09, 2024 12:10

போராட்டம் அது இது என்றால் அவ்வளவுதான், திருட்டு திமுக பஞ்சாயத், சட்டசபை, பாராளுமன்றம் அனைத்திலும் அவர்களுக்கு காசு quarter வாங்கி கொண்டு வோட்டு போட்டு விட்டு இப்போது போராட்டம் அது இது என்று நல்லா இருக்கு உங்கள் நியாயம். டாஸ்மாக் இல்லையென்றல் அடுத்த தேர்தலுக்கு உங்களுக்கு யார் பணம் கொடுப்பார்கள். ஆதலால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பள்ளி, காலேஜ் கோவில் அருகில் இடம் கொடுங்கள்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை