உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் சதம் அடித்த வெயில் மீண்டும் 101.1 டிகிரி பதிவு 

புதுச்சேரியில் சதம் அடித்த வெயில் மீண்டும் 101.1 டிகிரி பதிவு 

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று வெயில் 101.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.புதுச்சேரியில் கடந்த பிப்., மார்ச், ஏப்., மாதம் முழுதும் வெயில் வாட்டி வதைத்தது. மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் துவங்கி முதல் நாள் வெயில் 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் விட்டு விட்டு லேசான துாரல் மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் புதுச்சேரியில் 97.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நேற்று வெப்பம் அதிகரித்து 101.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ