உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, காரைக்காலில் 49 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவக்கம் 

புதுச்சேரி, காரைக்காலில் 49 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவக்கம் 

புதுச்சேரி : புதுச்சேரி காரைக்காலில் 49 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிந்தது.பிளஸ் 1 தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கி 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாள் மொழிப்பாட தேர்வு நடந்தது. நாளை 28ம் தேதி ஆங்கிலம், ஏப். 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி அறிவியல், 8ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. காலை 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு மதியம் 1:15 மணிக்கு நிறைவு பெற்றது. முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்கவும், விபரங்களை சரிபார்க்க ஒதுக்கப்பட்டது. இத்தேர்வுக்காக புதுச்சேரி யில் 37 தேர்வு மையங்களும், காரைக்காலில் 12 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் 84 அரசு பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள், 122 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12,613 மாணவர்களும், 599 தனித்தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பட்டு தேர்வு எழுதினர். காரைக்காலில் 25 அரசு பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 தனியார் பள்ளிகள் என மொத்தம் 60 பள்ளிகளைச் சேர்ந்த 2479 மாணவர்களும், 259 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். இதில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று நடந்த மொழித் தேர்வில் 139 பேர் ஆப்சென்டாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ