| ADDED : ஜூன் 09, 2024 03:59 AM
புதுச்சேரி, : சென்டாக் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வரும் 11ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அந்தந்த பிராந்தியங்களில் உடற்தகுதி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி உயர் கல்வி சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சென்டாக் மூலம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக மாற்றுத்திறனாளி மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட உடல் தகுதி, மாற்றுத்திறனுக்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை வழங்குவதற்காக வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உடல் தகுதி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாகி, ஏனாமில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேரில் ஆஜராகி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுதிறன் சான்றிதழ் பெறலாம். புதுப்பிக்கப்பட்ட மாற்றுதிறன் சான்றிதழையும் இந்த உடற்தகுதி முகாமில் பெறலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.