உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.13 ஆயிரம் குட்கா பறிமுதல் பாகூரில் 4 பேர் கைது

ரூ.13 ஆயிரம் குட்கா பறிமுதல் பாகூரில் 4 பேர் கைது

பாகூர் : பாகூர் பகுதியில் குட்கா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி அருகே ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.அந்த கடையில் ஆய்வு செய்ததில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, பெட்டிக்கடை உரிமையாளர் தேங்காய்திட்டு காளி கோவில் வீதியைச் சேர்ந்த சித்தாநந்தன் 33; என்பவரை கைது செய்தனர்.இதேபோல், முள்ளோடை சந்திப்பு அருகே உள்ள பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர், 60; என்பவரை போலீசார் கைது செய்தனர். பாகூர் போலீசார் சேலியமேடு கிராமத்தில் உள்ள கடையில் ஆய்வு செய்தபோது 5,200 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் முருகன், 48, என்பவரை கைது செய்தனர்.சோரியாங்குப்பம் பகுதியில் குட்கா விற்பனை செய்த முருகன், 50, என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த 3 ஆயிரத்து 800 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை