உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

பாகூர் : மணமேடு கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணமேடு தென்பெண்ணையாற்று மேம்பாலத்தின் கீழே, கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், மணமேடு கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், 20; மற்றொரு நபர் திருவந்திபுரம் அருகே உள்ள தொட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 106 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நவீன்குமாரை சிறையிலும், சிறுவனை சீர்த்திருத்த பள்ளியிலும் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி