உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார் மேலாளருக்கு கத்தி குத்து 2 பேர் கைது; இருவருக்கு வலை

பார் மேலாளருக்கு கத்தி குத்து 2 பேர் கைது; இருவருக்கு வலை

அரியாங்குப்பம் : மது பாரில் மேலாளரை கத்தியால் குத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை ஆர்.கே., நகர் அருகில் தனியார் மது பார் உள்ளது. பாருக்கு வந்த அரியாங்குப்பம் பாபு, தியாகராஜன், ஓடவெளி தாஸ், வீராம்பட்டினம் ஜெயசீலன் ஆகியோர் மது குடித்தனர். அவர்கள் பணம் இல்லாமல், மது கேட்டு, பார் ஊழியரிடம் தகராறு செய்தனர். அதை பார் மேலாளர் தேவநாதன், 42; தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த, 4 பேரும் அவர்கள் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து, அவர்கள் பாரில் இருந்த கண்ணாடி, டேபிளை உடைத்து சேதப்படுத்தி, அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த தேவநாதன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, பாபு,38; தியாராஜன், 40, ஆகியோரை கைது செய்தனர். தாஸ், ஜெயசீலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ