உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ போன் பறித்த 2 பேர் கைது

ஐ போன் பறித்த 2 பேர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் அருகே போதையில் நண்பரை தாக்கி மொபைல் போன், மோதிரத்தை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் சபீர்,20. இவரது நண்பர்கள் வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான வாழப்பட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் ஞானவேல், 22; வெங்கடாஜலபதி மகன் மதன்குமார், 23. மூவரும் நேற்று முன்தினம் இரவு பெரம்பை சுடுகாடு பகுதியில் மது அருந்தினர்.போதையில் ஞானவேல் மற்றும் மதன்குமார் ஆகியோர் சபீரை தாக்கி, அவரிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐ போன், மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.இது குறித்து சபீர், வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப் பதிவு செய்து, மதன்குமார் மற்றும் ஞானவேல் ஆகியோரை கைது செய்தனர். போன் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை