உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபசார வழக்கில் 2 பேர் கைது

விபசார வழக்கில் 2 பேர் கைது

வில்லியனுார் : வில்லியனூர் அருகே வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த அரியூர் மகாலட்சுமி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனுார் சப் - இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான மகளிர் போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஒரு இளம் பெண், வாலிபர் ஒருவர் சிக்கினார்.விசாரணையில் வாலிபர் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமரகுரு, 25, என தெரியவந்தது. மேலும் வீடு வாடகை எடுத்து விபசார தொழிலில் ஈடுபட்ட கண்டமங்கலம் அடுத்த தாண்டவமூர்த்திக்குப்பம், ஒத்தவாடை வீதியை சேர்ந்த லட்சுமி, 40, ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர். அரியூர் அஜித் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்