உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபசார தொழில் நடத்திய 2 பெண்கள் கைது

விபசார தொழில் நடத்திய 2 பெண்கள் கைது

புதுச்சேரி: ரெயின்போ நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழில் நடத்திய 2 பெண்களை கைது செய்த போலீசார், 4 அழகிகளை மீட்டனர்.புதுச்சேரி ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேகப்படும்படி வெளிநபர்கள் வந்து செல்வதாக பெரிய கடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் திடீரென சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது, அங்கு 4 அழகிகளை அடைத்து வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ரெயின்போ நகரை சேர்ந்த அமுதா, 58; மரக்காணத்தை சேர்ந்த கீர்த்தி, 26; ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், அமுதா கடந்த 3 மாதங்களாக அங்கு வாடகை வீடு எடுத்து விபசார தொழிலை நடத்தியதும், கீர்த்தி வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்ததும் தெரியவந்தது.தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 4 அழகிகள், மருத்துவ பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை