உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை

வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி மயானக் கொள்ளை நடந்தது. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், சுமன், பிரதீப் ஆகியோர் சத்தம் போட்டு சென்றனர்.இதைக்கண்ட, அதே பகுதியை சேர்ந்த கோகுலன், 28; என்பவர் தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த, சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும், கத்தி மற்றும் இரும்பு பைப்பால், கோகுலனை தாக்கி தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த கோகுலன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ் உட்பட 3 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி