மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் 3 பேரிடம் பல்வேறு வகையில் 3.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் அபிராமி. இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல ஏஜென்சி தேடினார். இது தொடர்பாக, ஆன்லைன் மூலம் கிடைத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, ஒரு நபரிடம் பேசினார். அந்த நபர், தங்கும் அறை, விமான டிக்கெட் ஆகியவற்றிற்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என, கூறினார். அதை நம்பி, அப்பெண் 1.55 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.அதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த நித்திலதேவி என்பவர், ஆன்லைன் மூலம் துணி வாங்குவதற்கு பேஸ் புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, அந்த லிங்கை கிளிக் செய்தார்.பின், அந்த துணியின் நிலையை அறிய கஸ்டர் எண்ணை தொடர்பு கொண்டார். மர்ம நபர் கூறிய அவ்வல்டெஸ்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து, வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார்.பின், அவரது கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. சாரம் பகுதியை சேர்ந்த மணி, என்பவருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார். முன்பணம் செலுத்தினால் மட்டும் கடனுதவி வழங்கப்படும் என, அந்த நபர் கூறியதை அடுத்து, 55 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago