மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
வில்லியனுார்: வில்லியனுார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1:50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை அரசு பள்ளி அருகே மூன்று பேர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த வாலிபர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி படித்தனர்.விசாரணையில் அவர்கள் கஞ்சா பண்டல்களை வைத்து பங்கு பிரித்து கொண்டிருந்தது தெரியவந்தது. கஞ்சாவுடன் ஸ்டேஷன் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.அதில் கோட்டைமேட்டை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்(எ) வினோத்குமார்,24; பங்கூரை சேர்ந்த பழனி மகன் சதீஷ்குமார்,24; செம்பியபாளையத்தை சேர்ந்த இரிச்சப்பன் மகன் தசரதன்,22; என தெரியவந்தது.மேலும் விசாரணையில் ஒரிசா மாநிலத்திற்கு சென்ற அங்குள்ள ஏஜென்ட்டுகள் மூலம் கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்வதற்காக மூவரும் தனித்தனியாக பங்கு பிரித்தது தெரிந்தது.மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மூன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago