மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
பாகூர் : பாகூர் தாலுகாவில், 34 ஓட்டுச் சாவடிகள் பதட்டமான என, அடையாளம் காணப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருக்கி வரும் நிலையில், ஓட்டுச் சாவடிகளை தயார் செய்யும் பணியில் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.பாகூர் தொகுதியில் 14 ஓட்டுச் சாவடிகளும், ஏம்பலம் தொகுதியில் 12 ஓட்டுச் சாவடிகளும், நெட்டப்பாக்கம் தொகுதியில் 8 ஓட்டுச் சாவடிகள் என, பாகூர் தாலுகாவில் மொத்தம் 34 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு அளிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago