| ADDED : மே 25, 2024 01:33 AM
புதுச்சேரி: உழவர்கரையில் முக்கிய சாலை பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட, அனைவரும், ஒத்துழைக்குமாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில், வேண்டுகோள் விடுக்கப் பட்டது.இதன் தொடர்ச்சியாக லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லுாரி சாலை, ஏர்போர்ட் சாலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், இறைச்சிக்கடைகளை ஆணையர் சுரேஷ் ராஜ் ஆய்வு செய்தார்.அங்கு உருவாகும் குப்பைகளை, பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், குப்பைகளை அதற்கான வண்டியில் ஒப்படைக்கவும், வியாபார நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதைத்தொடர்ந்து, பிரதான சாலைகள், அனைத்து வணிக வளாகங்கள், சாலையோர கடைகளுக்கு மக்கும் மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் நிறுவன குப்பை வண்டியில் ஒப்படைக்க அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், எச்சரிக்கையை மீறி, சாலைகளில் குப்பை கொட்டிய, 37 வியாபார நிறுவனங்களுக்கு, அப ராதம் விதிக்கப்பட்டு, மொத்தம், ரூ.4,750 வசூலிக்கப்பட்டது.