உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சகோதரர்களை தாக்கிய 4 வாலிபர்கள் கைது

சகோதரர்களை தாக்கிய 4 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: முன்விரோத தகராறில் சகோதரர்களை தாக்கிய நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி உழவர்கரை வயல்வெளி நகரை சேர்ந்தவர் லட்சுமணன், 24. இவருக்கும், ரெட்டியார்பாளையம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர்கள் அந்தோணி, விக்கி, தீனா, புவனேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 1ம் தேதி மயான கொள்ளை நிகழ்ச்சியில், இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்த லட்சுமணனின் தம்பி அரவிந்த் என்பவரை, அந்தோணி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து தாக்கினர். அதை தட்டி கேட்ட, அரவிந்தனின் சகோதரர்களான லட்சுமணன், ராமன் ஆகியோரை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அந்தோணி, 26; விக்கி, 25; தீனா, 26; புவனேஷ், 26, ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ