உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மூலம் 400 மீட்டர் சாலை அமைப்பு மாசு கட்டுப்பாட்டு குழுமம் அசத்தல்

பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மூலம் 400 மீட்டர் சாலை அமைப்பு மாசு கட்டுப்பாட்டு குழுமம் அசத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலம் 400 மீட்டர்சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்டா, டீ கப் உள்ளிட்டவற்றை புதுச்சேரி அரசு தடை செய்துள்ளது. ஆனால், தடையை மீறி இவை சில இடங்களில் தயாரிக்கப்படுவதுடன் விற்பனையும் செய்கின்றனர்.இதனால் புதுச்சேரி அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட 5 துறைகள் இணைந்து பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு சென்று சோதனை செய்வதும், விற்பனை செய்யும் குடோன்களில் சோதனை செய்து ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் 5 டன் அளவுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ளது. இவற்றை சாலை அமைக்க பயன்படுத்த சுற்றுச்சூழல் துறை முடிவு செய்தது.பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது வெப்பம்அதிகரிக்க செய்து அதனை பொடிபொடியாக மாற்றினர். இந்த பொடி கலவையை , தார் சாலை அமைக்கும்போது, சாலை அமைக்க பயன்படுத்தும்மொத்த, தார் அளவில் 10 சதவீதம் சேர்க்கப்படுகிறது.இதன் மூலம் தார் சாலையில் ஏற்படும் சிறிய துவாரங்கள் இன்றி சாலை அமைக்க முடியும். இந்த முறையில் பறிமுதல் செய்த ஒருமுறை பிளாஸ்டிக் துகள்கள் சேர்த்து 400 மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்கும் பணி நெல்லித்தோப்பு, கருணாகரன் வீதியில், 4 மற்றும் 5வது குறுக்கு வீதியில் நேற்று நடந்தது.மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் சிவபாலன், இளநிலை பொறியாளர் குப்புசாமி ஆகியோர் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.சரியான அளவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து சாலை அமைக்க ஊழியர்களை அறிவுறுத்தினர். இதுபோல் புதுச்சேரி முழுதும் நகர்உட்புற சாலைகளில் பறிமுதல் செய்துள்ள ஒரு முறை பிளாஸ்டிக் துகள்கள் மூலம் சாலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ