உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண கூட்ட நெரிசலில் 2 பெண்களிடம் 4.5 சவரன் திருட்டு 

திருக்கல்யாண கூட்ட நெரிசலில் 2 பெண்களிடம் 4.5 சவரன் திருட்டு 

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் இரு பெண்களிடம் நான்கரை சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றவர்களுக்கு இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த கந்தசாமி மனைவி ஞானாம்பாள், 80; கழுத்தில் அணிந்திருந்த 2.5 சவரன் செயினை மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். அதுபோல் வேறு ஒரு பெண் தனது பையில் வைத்திருந்த 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.அவர்கள் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி