உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியன் - 2 படத்திற்கு 5 கிலோ கற்பூரம் ஏற்றியதால் பதற்றம்

இந்தியன் - 2 படத்திற்கு 5 கிலோ கற்பூரம் ஏற்றியதால் பதற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்தியன் - 2 படத்திற்கு 5 கிலோ கற்பூரம் ஏற்றி கமல் ரசிகர்கள் கொண்டாடியபோது, பேனர் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் - 2 படம் நேற்று வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. கமல் ரசிகர்கள் தியேட்டர்களில் பேனருக்கு பாலபிஷேகம், பட்டாசு என வெடித்து கொண்டாடினர்.புதுச்சேரியில் இந்தியன் - 2 சினிமாவை கொண்டாடும் வகையில் ரத்னா திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ கற்பூரத்தை ஏற்றி கமல் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஒரு கட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கற்பூரம் அருகில் இருந்த பேனருக்கு பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.அங்கிருந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் கற்பூரத்தின் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது போன்று செய்ய கூடாது என, ரசிகர்களையும் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை