மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் 2.52 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்காலை சேர்ந்தவர் சபிதா. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர், 99 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.அதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆகாஷ், 41 ஆயிரம் ரூபாய், புதுசாரம் சுரேஷ் 40 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர். லாஸ்பேட்டை லலித்குமார் என்பவரை தொடர்பு கொண்ட நபர், வங்கி கணக்கை புதுப்பிக்க, கே.ஓய்.சி., மற்றும் கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார். அதனை கொடுத்த அடுத்த நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 56 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. சிவசங்கர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குவது தொடர்பாக ஆன்லைனில் 16 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago