உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடைத்தேர்தலில் போட்டியிட 57 பேர் மனு தாக்கல்

இடைத்தேர்தலில் போட்டியிட 57 பேர் மனு தாக்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 6 பெண்கள் உட்பட 57 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அதனையொட்டி இத்தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான மனு தாக்கல் கடந்த 14ம் தேதி துவங்கியது. அதில் நேற்று முன்தினம்வரை தி.மு.க.,; பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியா மூர் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீநிதியின் தாய் நெசலுார் செல்வி உள்ளிட்ட 32 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 6 பெண்கள் உட்பட மொத்தம் 57 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.வரும் 24ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 26ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை