புதுச்சேரி: வானத்தில் ஒரே வரிசையில் காணப்பட்ட 6 கோள்களை சிறப்பு தொலை நோக்கி மூலமாக சிறுவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.வானத்தில் சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ், புதன், வியாழன் ஆகிய 6 கோள்களும் கடந்த 3ம் தேதி முதல், நேற்று 9ம் தேதி வரை காணப்பட்டது. அதனை காண, புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் கடற்கரை காந்தி சிலை அருகே சிறுவர்கள், பொதுமக்கள் பார்க்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிறுவர்கள் ஆர்வமுடன் வந்து சிறப்பு தொலை நோக்கி வழியாக கண்டு ரசித்தனர். இதுகுறித்து, அறிவியல் இயக்க துணை தலைவர் ேஹமாவதி, கூறுகையில், நேற்று ஒரே வரிசையில், வானத்தில் 6 கோள்கள் காணப்பட்ட நிகழ்வை, மொபைல் போன் மூலம், ஸ்கை வியூ லைட் என்ற செயலி மூலம் 6 கோள்கள் எந்த நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறது என விளக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 28ம் தேதி, அடுத்த ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29ம் ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன், பொதுச் செயலாளர் முருகவேல்ராஜா, பொருளாளர் ரமேஷ், ஆலோசகர் சேகர், உறுப்பினர் விஜய் கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.