உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 சவரன் நகை திருட்டு

7 சவரன் நகை திருட்டு

புதுச்சேரி: வீட்டு பீரோவில இருந்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பங்கூர், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வபுத்திரன், 36; வில்லியனுாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி கடைக்கு சென்றார். அவரது மனைவி அன்று காலை 11:45 மணியளவில் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு அலமாரியை உடைத்து அதிலிருந்த 7 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியன திருடு போய் இருந்தது. இதுகுறித்து செல்வபுத்திரன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை