| ADDED : ஜூன் 01, 2024 04:28 AM
விழுப்புரம் : காதல் மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு, விழுப்புரம் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையை சேர்ந்தவர் பழனி மகன் பச்சையப்பன்,36; இவரும், திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ஷாலனி,23; என்பவரும் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பச்சையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஷாலினியை தாக்கி துன்புறுத்தி வந்தனர். அதில் விரக்தியடைந்த ஷாலினி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில், பச்சையப்பன், அவரது தாய் பத்மினி ஆகியோரை கைது செய்த அவலுார்பேட்டை போலீசார், இருவர் மீதும் விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் தற்கொலைக்கு துாண்டிய பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, பச்சையப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, பத்மினியை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார.்அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.