உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடையை மீறி மது விற்பனை 2 பேர் மீது வழக்குப் பதிவு

தடையை மீறி மது விற்பனை 2 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : தடையை மீறி மதுபானம் விற்ற இருவரிடம் இருந்து 34.5 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்த கலால் துறை, தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தது. மிலாடி நபியை முன்னிட்டு, புதுச்சேரியில் அனைத்து மதுபானம், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டது. மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. ஆனால் சில இடங்களில் தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. கலால் துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைத்து தடையை மீறி மதுபானம் விற்போரை தேடும் பணி நடந்தது. சேதாரப்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், திருக்கனுார், லாஸ்பேட்டை, பனையடிக்குப்பம், திருபுவனை, உறுவையாறு ஆகிய பகுதிகளில் திருட்டுத் தனமாக மதுபானம் விற்பனை செய்த கலிதீர்த்தாள்குப்பம் ஆண்டியார்பாளையம் பூபாலன், 48; பனையடிக்குப்பத்தில் மதுபானம் விற்பனை செய்த கரையாம்புத்துார் அருகில் உள்ள வீராணத்தைச் சேர்ந்த சுகுமாறன், 44; மீது வழக்கு பதிந்து, 18 லிட்டர் சாராயம், 16.5 லிட்டர் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை