உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.

மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.

வில்லியனுார்: புதுச்சேரி அரசு கல்வித்துறை விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறை சார்பில் நான்காம் வட்டார அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டி நடந்து.அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டி துவக்க விழாவில் உடற்கல்வி விரிவுரையாளர் ரஷீத் அகமத் வரவேற்றார். நான்காம் வட்டார விளையாட்டுக் குழு தலைவர், கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி துணை முதல்வருமான பாக்கியலட்சுமி போட்டியை துவக்கிவைத்தார்.புளூ ஸ்டார் பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவ செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாராயணன் போட்டி விதிகளை விளக்கிக்ககூறினார்.இந்த போட்டியில் 14 வயது பிரிவில் 33 அணிகளும், 17 வயது பிரிவில் 22 அணிகளும். 19 வயது பிரிவில் 9 அணிகளும் பங்கேற்று விளையாடினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், செந்தில்குமரன், பாரதி, நந்தினி ஆகியோர் செய்தனர். கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி உடற்கல்வி விரிவுரையளர் அமல்ராஜ் ஜார்ஜ் சேவியர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ