உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு 

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு 

பாகூர் : பாகூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 63; விவசாயி. இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுமார் 30 அடி ஆழமுள்ள தரைக் கிணற்றில் பசுமாடு ஒன்று தடுமாறி விழுந்தது.இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து, பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி