உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வி.ஏ.ஓ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு

புதுச்சேரி: காலாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு நடத்தினார்.பெரிய காலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தொகுதி எம்.எல்.ஏ.,கல்யாணசுந்தரம் காலாப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் தகுதி உடைய மாணவர்களை அலைகழிக்காமல் உடனடியாக சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.சான்றிதழ் பெற மாணவர்கள், பெற்றோர்கள் நீண்ட நேரம் வரிசை நிற்பதை அறிந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அமர நாற்காலி வசதி ஏற்படுத்தி தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ