மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : லாஸ்பேட்டை மாநிலப் பயிற்சி மையத்தில், புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் நடந்தது.மாநில அளவில் நடந்த கருத்தரங்கில் புதுச்சேரி நான்கு பிராந்தியங்களில் இருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேரடியாகவும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இணையவழியிலும் கலந்து கொண்டனர்.கேந்திர வித்யாலயா முன்னாள் துணை ஆணையர் பாலசுப்ரமணியன், புதுச்சேரிப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் விஜயகுமார், போப் ஜான்பால் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ஜீன் கிளாடு ஆகியோர் நடுவர்களாக இருந்து ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகளின் செயல் விளக்கத்தை கேட்டுச் சிறந்த பத்துப் புதுமையான கற்பித்தல் முறைகளைத் தேர்வுசெய்தனர்.பரிசளிப்பு விழாவில்,ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பயிற்சி மையத்தின் சிறப்புப் பணி அலுவலர் சுகுணா சுகிர்தபாய்0நோக்கவுரை ஆற்றினார். பள்ளித் துணை ஆய்வாளர்கள் லிங்கசாமி, அமல்ராஜ் லீமாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றி சிறந்த படைப்புகள் கொடுத்த ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.விரிவுரையாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago