உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் துணி பையை திருடிச் செல்லும் ஆசாமி வீடியோ வைரல்

பைக்கில் துணி பையை திருடிச் செல்லும் ஆசாமி வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக்கில் மாட்டி வைத்திருந்த துணி பையை திருடிச் செல்லும் டிப்டாப் ஆசாமி குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்த தம்பதி, கடந்த 21ம் தேதி, தங்களது வீட்டு விசேஷத்திற்காக அண்ணா சாலையில் உள்ள துணி கடையில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை வாங்கினர். புதிதாக வாங்கிய ஆடை பையை தங்களது பைக்கில் மாட்டி வைத்து விட்டு, எதிரில் உள்ள பானி பூரி கடைக்கு சென்றனர்.கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கில் மாட்டி வைத்திருந்த துணி பை மாயமாகி இருந்தது.கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது, அந்த வீதியில் நடந்து செல்லும் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி, பைக்கில் மாட்டி வைத்திருந்த பையை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இது தொடர்பாக பெரியக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் துணி திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மர்ம நபர் துணி பையை திருடிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை