உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் ரூ. 2 லட்சம் ஏமாற்றிய நபருக்கு வலை

பெண்ணிடம் ரூ. 2 லட்சம் ஏமாற்றிய நபருக்கு வலை

அரியாங்குப்பம் : பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, திலாசுபேட்டை தேரோடும் வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி மகாலட்சுமி புத்தா, 54. இவரின் உறவினர் சென்னை, மாதவரம் வி.ஆர்.டி., நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஜிப்மரில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு முன் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி, மகாலட்சுமி புத்தாவிடம் 2 லட்சம் ரூபாயை சில மாதங்களுக்கு முன், கடன் வாங்கினார். பணத்தை ஏப்ரல் மாத்திற்குள் தருவதாக தெரிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் முடிந்தும் அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.சந்தேகமடைந்த மனைவி மகாலட்சுமி புத்தா, ஜிப்மர் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அரிகிருஷ்ணனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என, தெரியவந்தது. இதையடுத்து, நேரில் சென்று கொடுத்த பணத்தை கேட்ட அவரை, அரிகிருஷ்ணன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அரிகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ