உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.கருவடிக்குப்பம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகள் அபிநயா, 21. இவர் பி.காம்., தொலைதுார கல்வி மூலம் வீட்டில் இருந்து படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தந்தை அமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ