உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் படப்பிடிப்பு நடிகர் கமல் பங்கேற்பு

புதுச்சேரியில் படப்பிடிப்பு நடிகர் கமல் பங்கேற்பு

புதுச்சேரி, : புதுச்சேரி விமான நிலையத்தில் நடந்த 'தக் லைப்' படப்பிடிப்பில் நடிகர் கமல் பங்கேற்றார்.இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில், நடிகர் கமல் நடிக்கும் தக் லைப் திரைப்படம் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.இப்படத்தின் விமான நிலைய காட்சிக்கான படப்பிடிப்பு, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நேற்று நடந்தது.இதற்காக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த நடிகர் கமல் தனியார் ஓட்டலில் தங்கினார். நேற்று காலை 5:00 மணிக்கு விமான நிலையத்தில் படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் மணிரத்னம், நடிகர் நாசர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு முடிந்து மதியம் 3:00 மணிக்கு தனி விமானத்தில் கமல் புறப்பட்டு சென்றார்.முன்னதாக நடிகர் கமலை, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தனது மனைவியுடன் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை