உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்

பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்

வில்லியனுார்: வில்லியனுாரில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சினிமாக நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார்.அவர், பேசியதாவது: முதல்வர் ரங்கசாமி, சின்ன காமராஜர். பழனிசாமி நான்கரை வருடம் முதல்வராக இருந்தார். அவர், எத்தனை கோடி சாப்பிட்டு இருப்பார். இவருக்கு பதவி கொடுத்த சசிகலாவையும், ஆட்சியை தொடர காரணமாக இருந்த மோடியும் பார்த்து யார் என, கேட்கிறார். அவருக்கு ஓட்டு போட்டால் உங்களையும் யார் என்று கேட்பார். இப்ப, ஒத்த விரலில் ஓங்கி அடிப்பாராம். மற்ற விரல்களில் சிரங்கு பிடித்துவிட்டதா.வந்தே பாரத் ரயில் எல்லாம் மோடி விட்டுள்ளார். ஜி.எஸ்.டி., மற்றும் நீட்டை காங், கட்சியை சேர்ந்த சிதம்பரம் தான் கொண்டு வந்தார். மீண்டும் மோடி வந்தா தான் நமது பிள்ளைகள் எல்லாம் நல்லா இருப்பாங்க. இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ