மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி: கேரளா மாநில மக்களின் துயரத்தில், புதுச்சேரி மக்கள் பங்கேற்க வேண்டும் என, அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான நிலச்சரிவில் சிக்கி, 250க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டத்தின் அருகில் உள்ளது. இந்தியநாடு இறையாண்மை, சகோதரத்துவத்துத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் பெருந்துயரில் புதுச்சேரி மாநிலமும் பங்கேற்று இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு சார்பில் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். கேரள மாநில பெருந்துயரில் பங்கேற்கும் விதமாக, அம்மாநில அரசின் பேரிடர் முதல்வர் நிவாரண நிதிக்காக, ரூ.25 ஆயிரத்தை அனுப்பியுள்ளேன்.இதேபோல வியாபாரிகள், சமூக அமைப்பினர், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர், அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்பு புதுச்சேரி மக்களும் கேரளா மாநில மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago