மேலும் செய்திகள்
தினமலர்- - பட்டம் இதழ் அறிவு பெட்டகம்
21 hour(s) ago
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
21 hour(s) ago
ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு
21 hour(s) ago
புதுச்சேரி : உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையில் வாலிபர் இறந்ததை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கம்யூ., கட்சியினர் பங்கேற்றனர்.புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன், 24; என்பவர் கடந்த ஏப்.24ம் தேதி சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது இறந்தார்.இவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூ., கட்சி சார் நேற்று சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் துவக்கி வைத்து பேசினார்.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தமிழக அரசும்,புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சையில் இறந்த புதுச்சேரி வாலிபர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தப் பட்டது.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago