| ADDED : ஜூன் 23, 2024 05:17 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில், ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் பேசினார். இதில், புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள் பாசிக், பாப்ஸ்கோ, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம், ஜவுளி பூங்கா, பஸ் நிலைய பணிகள் விரைந்து முடித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி, மாநில துணைத் தலைவர்கள், முருகன், சேகர், சிவகுருநாதன், மரி கிறிஸ்டோபர், மோதிலால், மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், மூர்த்தி, செந்தில்முருகன், பாஸ்கர பாண்டியன் பங்கேற்றனர்.