உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க மாநிலக்குழு கூட்டம்

ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க மாநிலக்குழு கூட்டம்

புதுச்சேரி: தொழிலாளர் துறையில் முறைகேடான நடைமுறையை மாற்றி, 3 ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் தலைவர் சங்கரன் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இணைச்செயலாளர் சிவசங்கர், கமிட்டி உறுப்பினர்கள் வெங்கடேசன், ராபர்ட், பாஸ்கர், தேவநாதன், கனகசபை, கார்த்திகேயன், கலைச்செல்வன், தென்னரசு, அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் புதுச்சேரி மாநில மாநாட்டை, வரும் நவ.,9,ம் தேதி நடத்த வேண்டும். தொழிற்சங்கத்தின், 22வது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பரில் ஒடிசாவில் நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் புதுச்சேரியிலிருந்து தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி